மதுரை, அக். 4: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று மாலை ஒரு மணி நேரம் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகைதீன் அப்துல் காதர், ரகுபதி, ஜெயபாஸ்ர், சுரேஷ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோபி, நில அளவை அலுவலர்கள் சங்க ஒன்றிப்பின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய அவகாசம் வழங்க வேண்டும், திட்டத்திற்கான முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.