திருமங்கலம்: கள்ளிக்குடி அருகேயுள்ள மருதங்குடி விஏஒ அன்புநிதி (41). இவர் நேற்று முன்தினம் அலுவலகப் பணியில் இருந்த போது,சோமங்கலம் கண்மாயில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு மருதங்குடி திருமால் பிரிவு அருகே விஏஓ மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஆய்வுக்காக நின்றிருந்தனர். அப்போது வந்த லாரியை நிறுத்தினர்.
இவர்களைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்த போது அனுமதியின்றி ஆறு யூனிட் கிராவல் மண் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை செய்ய போது லாரியை ஓட்டி வந்தது புதுக்கோட்டை மாவட்டம் ஒலைமான்பட்டியைச் சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்து கள்ளிக்குடி ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.