மதுரை, ஜூலை 24: மதுரையில் இன்று (ஜூலை 24) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மாநகராட்சியின் 7 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்காக 4 இடங்களில் நடக்கிறது. இதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் வார்டு 8, வார்டு 11 ஆகிய பகுதிகளுக்கு சர்வேயர் காலனியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இந்த முகாம் நடக்கிறது.
மண்டலம் 2ல் வார்டு 1, வார்டு 2 ஆகிய பகுதிகளுக்கு புது விளாங்குடி புகழ் கல்யாண மகாலிலும், மண்டலம் 3ல் வார்டு எண் 52க்கு பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் சுற்றுலா பிளாசாவிலும் ,மண்டலம் 5ல் வார்டு 71, வார்டு 74 பகுதிகளுக்கு பழங்காநத்தம் சமுதாயக் கூடத்திலும் நடக்கிறது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் இம்முகாமில் பட்டா மாறுதல் துவங்கி மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து வகை மனுக்களையும் பொதுமக்கள் வழங்கி, 45 நாட்களுக்குள் தீர்வு பெறலாம். இத்தகவல் மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.