Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொட்டாம்பட்டி பகுதியில் நலத்திட்ட உதவி பெண்களின் பெரும் ஆதரவோடு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் பி.மூர்த்தி உறுதி

மேலூர், ஜூலை 28: கொட்டாம்பட்டி பகுதியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பி.மூர்த்தி, பெண்களின் ஆதரவோடு திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, கொட்டாம்பட்டியில் உள்ள எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, பட்டூர், மேலவளவு ஊராட்சிகளில் திமுக சார்பில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பொதுமக்களுக்க நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, ‘‘ தொடர்ந்து நல்லாட்சி கொடுத்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக நலத்திட்ட உதவிகள், இல்லம் தேடி வரும் அரசு திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பெண்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று நிச்சயம் திமுக ஆட்சி அமைக்கும்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி பொறுப்பாளர் ஆனந்த், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜராஜன், மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரேசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் தற்காகுடி சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், எழில்வேந்தன், ஒன்றிய துணை செயலாளர் ராஜா. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எட்டிமங்கலம் பங்கஜம் கணேசன், சென்னகரம்பட்டி ஸ்ரீதர், கொட்டாம்பட்டி பாலசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பட்டூர் செல்லையா, துணை தலைவர்கள் கலைவாணன், இளஞ்செழியன், கிளை செயலாளர் பிரசன்னா, மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் திருமாறன் உட்பட நிர்வாகிகள். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.