அலங்காநல்லூர், ஜூலை 11: அலங்காநல்லூர் அருகே பி.சம்பகுளம் கிராமத்தில் இரட்டை விநாயகர், அய்யனார், கருப்புசாமி, மந்தையம்மன், பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் யாகசாலை பூஜையில் 21 குடங்களில் நிரப்பப்பட்ட புனித நீர் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் இந்த குடங்களில் இருந்த நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.