மதுரை, ஆக. 2: தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ‘திருக்குறள் திருப்பணிகள்’ என்ற தலைப்பில் தொடர் வகுப்புகள் நடக்கிறது. மதுரை மணியம்மை பள்ளி, திருமங்கலம் இறையன்பு நூலகம், மேலூர் புரட்சி கவிஞர் மன்றம் ஆகியவை தமிழ்வளர்ச்சித் துறையுடன் இணைந்து இப்பயிற்சியை வழங்குகின்றன. மதுரை மணியம்மை பள்ளியில் திருவள்ளுவர் கழக செயலாளர் சந்தானம் திருக்குறள்...
மதுரை, ஆக. 2: தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ‘திருக்குறள் திருப்பணிகள்’ என்ற தலைப்பில் தொடர் வகுப்புகள் நடக்கிறது. மதுரை மணியம்மை பள்ளி, திருமங்கலம் இறையன்பு நூலகம், மேலூர் புரட்சி கவிஞர் மன்றம் ஆகியவை தமிழ்வளர்ச்சித் துறையுடன் இணைந்து இப்பயிற்சியை வழங்குகின்றன.
மதுரை மணியம்மை பள்ளியில் திருவள்ளுவர் கழக செயலாளர் சந்தானம் திருக்குறள் பயிற்சி வழங்குகிறார். இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். தமிழ்வளர்ச்சித்துறை வழிகாட்டலில் நடக்கும் இந்த பயிற்சி நாளை (ஆக.3) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.