மதுரை, ஆக. 2: ரேபிஸ் நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் ஜூலை.21 முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் கால்நடை மருத்துவர்கள் (சுயவிருப்பத்தில்) மற்றும் இப்பணிக்கு தேவையான வசதிகள் செய்து தர விரும்புவோர் மதுரை மாநகராட்சி கால்நடை மருத்துவரை 94987 48935 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அழகப்பாநகர் முத்துபட்டியிலும், ஆக.7 முதல் 12ம் தேதி வரையிலும், ஆக.13 முதல் 20 வரை ஆனையூரிலும், ஆக.21 முதல் 26 வரை கண்ணனேந்தல் பகுதியிலும், தத்தனேரியில் ஆக.28 முதல் செப்.2 வரையிலும் நடக்கிறது. இரயில்வே காலனி, மகபூப்பாளையத்தில் செப்.3 முதல் செப்.9 வரையிலும், சிந்தாமணி மற்றும் அனுப்பானடியில் செப்.9 முதல் 13ம் தேதி வரையிலும், திருப்பரங்குன்றத்தில் செப்.15 முதல் 19 வரையிலும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத்தகவலை மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.