உசிலம்பட்டி, ஆக. 1: உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக, இந்திய அரசியலமைப்பை காப்போம், மீட்டெடுப்போம் என்ற கோரிக்கையுடன் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி எம்.பாண்டியன் தலைமை தாங்கினார். ஏஐசிசி உயர் கமிட்டி உறுப்பினர்
எஸ்ஓஆர்.இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணக்குமார், மகேந்திரன், பொன் மணிகண்டன், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.தேன்மொழி முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் கவிஞர் கம்பம் பாரதன், உசிலம்பட்டி வட்டார தலைவர் வெஸ்டர்ன் முருகன், நகரத் தலைவர் பாண்டீஸ்வரன், துணைத் தலைவர் பிச்சை, வழக்கறிஞர் ரமேஷ்பாபு, வட்டார தலைவர்கள் புதுராஜா, ஜெயராஜ், செந்தில்குமார், ஆனந்தன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் கண்ணன், செயலாளர் தவமணி, ரங்கமலை தசரத பாண்டியன், அர்ச்சுனன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்துமணி நேதாஜி, சிங்கம் முத்துக்கண்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.