மதுரை, அக். 28: கலெக்டர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரைக்கு நாளை (அக்.29) விமானத்தில் வருகை தருகிறார். பிறகு 30ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு செல்ல உளள்ளதால், மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாவட்ட எல்லைக்குள் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
+
Advertisement

