Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின் திருட்டில் ஈடுபட்டோருக்கு ரூ.17.07 லட்சம் அபராதம் விதிப்பு அமலாக்கப் பிரிவினர் அதிரடி

மதுரை, நவ. 26: மின்திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.17.07 லட்சம் அபராதம் விதித்து மின் பகிர்மானக் கழக அமலாக்கப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்ட செயற்பொறியாளர் மனோகரன் தலைமையில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்ட விரோதமாக மின்திருட்டில் ஈடுபடுவோர் குறித்து அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, மதுரை அமலாக்க கோட்ட அதிகாரிகள் கடந்த நவ.6 மற்றும் 7ம் தேதிகளில் தேனி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பிரதுகாரன்பட்டி, கோம்பை, அம்மாபட்டி, எரசக்கநாயக்கனூர், கம்பம், கண்டமனூர், கல்லாபட்டி, தேவாரம், அனுமந்தன்பட்டி, கிழக்கு தேனி மற்றும் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் சுமார் 14 இடங்களில் சட்ட விரோதமான முறையில் மின் திருட்டுகள் கண்டறியபட்டது. இதனால் மின்வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.17 லட்சத்து 7 ஆயிரத்து 244ஐ இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோர்களுக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்கள் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் முன் வந்து ரூ. 1.04 லட்சத்தை இழப்பீட்டு தொகையை செலுத்தினர். இதுபோன்று மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மின் திருட்டில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை 9443037508 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் மின் பகிர்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.