மதுரை, நவ. 26: ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் பிரிவு சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 8வது ஊதியக்குழு தொடர்பாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியின் வரையறைக்குள் ஜூடிஎஸ் ஊழியர்களையும் கொண்டு வர வேண்டும்.
தொழிற்சங்க காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஏஐஜூடிஎஸ்யூ பொதுச்செயலாளர் மகாதேவய்ய பணிநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும். வணிகம் என்ற பெயரில் நடைமுறைகளுக்கு சாத்தியமற்ற இலக்கு நிர்ணயித்து ஜூடிஎஸ் மற்றும் எம்டிஎஸ் ஊழியர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் போக்கினை நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சங்க ஊழியர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

