வாடிப்பட்டி, செப். 23: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (45). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் இரவு வாடிப்பட்டியிலிருந்து குட்லாடம்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்மினிப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமணம் மண்டபம் முன்பாக திடீரென்று நிலை தடுமாறி டூவீலரில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிமாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+
Advertisement