புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில் சுற்றுலா திட்டம் பக்தர்களுக்கு அழைப்பு: ஒரே நாளில் பல இடங்களில் தரிசனம்
மதுரை, செப். 23: புரட்டாசி மாதத்தில் ஒரே நாளில் பல இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்யும் வகையில், பக்தர்களுக்கான சிறப்பு சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து ஆன்மிக சுற்றுலா திட்டத்தை தமிழகத்தில் உள்ள பக்தர்களுக்காக நடத்தி வருகின்றன.
இதன்படி சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில், காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் புரட்டாசி பெருமாள் கோயில் தொகுப்பு சுற்றுலா செப்.17 முதல் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.