மதுரை, செப். 23: மதுரை காந்தி மியூசியம் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில், சர்வதேச அமைதி தின சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். பேராசிரியர் நடராஜ் அமைதிக்கான வழிமுறைகள் குறித்து பேசினார். கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர், உதவிப் பேராசிரியர் கிருஷ்ணராஜ், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
முன்னதாக மாணவி ராஜேஸ்வரி வரவேற்றார். நிறைவாக மானவர் சூரிய பிரகாஷ் நன்றி கூறினார். இதில் பேராசிரியர் காந்திதுரை, எழுத்தாளர் அழகர்சாமி, மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.