வாடிப்பட்டி, செப். 14: தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதிகளில் திமுக இளைஞரணி சார்பாக கலைஞர் நூலகம் திறக்கப்படும் என, இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கென வாடிப்பட்டியில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான நூல்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தை, மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நேற்று திறந்து வைத்து பார்வையிட்டு வருகை பதிவேட்டில் முதல் நபராக கையெழுத்திட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இன்பாரகு, ஜி.பி.ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.இளங்கோ வரவேற்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன, பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்தியபிரகாஷ், ரகுபதி, ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், தன்ராஜ், முத்தையன், பொதும்பு தனசேகர், அருண்குமார், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஜெயராமன், துணை சேர்மன்கள் கார்த்திக், சாமிநாதன், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், முன்னாள் பேரூராட்சி சேர்மன் கிருஷ்ணவேணி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் குமரேசன், வெற்றிச்செல்வன், அன்புச்செல்வன், ஐயப்பன், மருதுராஜா, வண்ணி முத்துப்பாண்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நல்லதம்பி, பேரூர் இளைஞரணி வினோத் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் பங்கேற்றனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மதுரை மாநகராட்சி 1வது மண்டல பகுதியில் உள்ள யாதவா கல்லூரியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பொதுமக்களுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் பெ.சசிக்குமார், திருப்பாலை ராமமூர்த்தி உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள், அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.