பேரையூர், செப். 14: பேரையூர் பகுதியில் ஏஎஸ்பி அஸ்வினி உத்தரவின்படி போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பது சம்மந்தமாக போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன்படி பேரையூர் திருமால் நகரில் பாஸ்கரன் (67) என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதை அறிந்த பேரையூர் போலீசார் அவரை கைது செய்து, புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இதேபோல் நாகையாபுரம் பகுதிகளான அப்பக்கரை தொட்டியபட்டியில் முருகன் (51), சின்னச்சாமி (51) உள்ளிட்ட 3 பேரும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனை செய்தனர். இதையறிந்த நாகையாபுரம் போலீசார் அவர்களைக் கைது செய்து, புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.