மேலூர், டிச. 9: மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் கார்த்திகை மாத, 4வது சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக சிறப்பு பூஜை, அர்ச்சனை நேற்று வழிபாடு நடைபெற்றது. மாலையில் யாகசாலை பூஜை துவங்கி சங்கரலிங்கம் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு போன்ற 16 வகையான அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம் 108 சங்குகளில் நிரப்பப் பெற்று சிறப்பு பூஜைகள் செய்து, பின்னர் சங்கரலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம், நந்தியம் பதிகம், சிவபுராணம், சிவன் 108 போற்றி, பாராயணம் செய்தனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
+
Advertisement


