உசிலம்பட்டி, டிச. 9: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்னாம்பட்டி கிராமத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட சூழலில், இந்த கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி அரசு பள்ளிக்கு வந்து செல்ல மாணவ மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த இரு மாதங்களாக உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் தொடர் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் நேற்று பள்ளிக்கு செல்லாமல் பள்ளியை புறக்கணித்து விட்டு தங்கள் பெற்றோருடன் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
+
Advertisement


