மதுரை, டிச. 5: மதுரை நியூ மீனாட்சி நகரை சேர்ந்தவர் சையதுஅலி(26). இவர் கொடைக்கானல் செல்வதற்காக கீழசந்தைப்பேட்டை பிஷர் ரோட்டு வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 5 வாலிபர்கள், சையது அலி ஓட்டிய காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் தகராறு செய்து காரை சேதப்படுத்தினர். இதை செல்போனில் படம் பிடித்த டிரைவரை தாக்கினர். மேலும் அவரது காதை கடித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முடிவில் தாக்குதல் நடத்திய சிந்தாமணியை சேர்ந்த கணேசன்(24), அரவிந்தன்(24), நாகராஜ்(18), முரளி(24) மற்றும் அழகர்சாமி(20) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
+
Advertisement

