மதுரை, டிச. 5: வறண்ட மற்றும் மானாவாரி பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்த சிறுதானியங்களை பயிரிடலாம். தரிசு நிலங்கள் மற்றும் மீளமைக்கப்பட்ட நிலங்களில் பயிர் சுழற்சி முறையில் இவற்றை சாகுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் சிறுதானியங்கள் சாகுபடி பரப்பளவை, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்ட. ஆகவே சான்று பெற்ற விதைகளை, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், உழவர் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்று, சரியான நேரம், இடைவௌியில் விதைக்க வேண்டும். உயிர் மற்றும் மண்புழு உரங்களை பயன்படுத்துவதுடன், சொட்டுநீர் தௌிப்பான் பாசன முறைகளை கையாள வேண்டும். காலநிலை மாற்றத்தை சமாளித்து பயிரிட்டால் சிறுதானியத்தில் லாபத்தை அதிகரிக்கலாம் என, வேளாண் அதிகாரிகள் கூறினர்.
+
Advertisement

