மதுரை, ஆக. 5: மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. சில நாட்களில் மாநிலத்திலேயே அதிக அளவில் வெப்பநிலை பதிவானது. மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டாலும், மழை பெய்யாமல் கலைந்து சென்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது....
மதுரை, ஆக. 5: மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. சில நாட்களில் மாநிலத்திலேயே அதிக அளவில் வெப்பநிலை பதிவானது. மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டாலும், மழை பெய்யாமல் கலைந்து சென்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று மாலை மக்களை மகிழ்விக்கும் வகையில் மாநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்ப மிகவும் அவதிப்பட்டனர். மதுரை, ஒத்தக்கடை, கடச்சனேந்தல், அழகர்கோயில், புதூர், தல்லாகுளம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.