அலங்காநல்லூர், ஆக. 5: அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில், ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து உலக நன்மை மற்றும் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
+