மதுரை, டிச. 3: படைவீரர் கொடிநாளை முன்னிட்டு வரும் 7ம் தேதி கொடிநாள் உண்டியல் வசூலை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைக்கிறார். பின்னர் 11 மணியளவில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு தேநீர் விருந்து அளித்து கவுரவிக்கப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சேர்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுவை இரு பிரதிகளில் கலெக்டரிடம் வழங்கி தங்களது குறைகளை தீர்த்து கொள்ளலாம்.
+
Advertisement

