மதுரை, டிச. 2: முதியோருக்கு வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் இன்றும் (டிச.2) நாளையும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பிரவீன்குமார் கூறி இருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயது கடந்த முதியோரின் வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.இதன்படி நடப்பு மாதத்தில் இன்று(டிச.2), மற்றும் நாளை (டிச.3) 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த திட்டம் சார்ந்த பயனாளிகள் தங்களுடைய தொலைபேசி எண் மற்றும் முகவரி மாற்றம் இருப்பின் சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் வட்டாட்சியர்கள், வட்டவழங்கல் அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
+
Advertisement

