Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லோட்டஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

இளம்பிள்ளை, மே 17: மகுடஞ்சாவடி அருகே கனககிரியில் செயல்பட்டு வரும் லோட்டஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மணவர்கள் 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு மாணவி பிரவினா 581 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், காவியா சிவசங்கரி 578 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தினையும், தரண்யா 575 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தினையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் லோகிதா 496 மதிப்பெண்களும், நிதியரசு 490 மதிப்பெண்களும், தர்ஷினி 489 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும் உறுதுணையாக இருந்த ஆசிரியர், ஆசிரியைகளையும் பள்ளியின் தாளாளர் ரமணன், வேலவா எஜுகேஷனல் அண்டு சேரிட்டபிள் டிரஸ்ட் சேர்மன் சுப்பிரமணியன், பள்ளியின் நிர்வாக அலுவலர் பசுபதி, பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் பரிசு வழங்கி பாராட்டினர்.