சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை மாவட்ட நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கம் சிஐடியு மாவட்ட பேரவை கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வீரையா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முருகானந்தம் வேலை அறிக்கை சமர்ப்பித்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் வேங்கையா, சேவியர் ஆகியோர் பேசினர்.
மாவட்டத் தலைவராக வீரையா, மாவட்ட செயலாளராக முருகானந்தம், மாவட்ட பொருளாளராக ரமேஷ், துணைத் தலைவர்களாக சேவியர், கணேசன், செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்து உள்ளாட்சி துறை ஊழியர்களுக்கும் 7வது ஊதியக்குழு ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மை பணி உள்ளிட்ட 20 வகையான நிரந்தரப் பணி இடங்களை தனியார் மயமாக்கும் அரசாணைகளை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.