அரூர், ஜூலை 5: மொரப்பூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற திட்டத்தை முதலமைச்சர் காணொளி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் வட்டார உதவி இயக்குனர் (பொ) ஜீவகலா மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மொரப்பூர் வட்டார முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதிசெங்கண்ணன், முல்லை கோபால் கலந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க தொகுப்புகளை வழங்கினார். துணை வேளாண்மை அலுவலர் செந்தில்முருகன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை தோட்டக்கலை அலுவலர் முருகன் மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement