Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லால்குடியில் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் புதிய கிளை திறப்பு

கும்பகோணம் மே 25: கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனத்தின் 133வது லால்குடி புதிய கிளை திறப்பு விழா லால்குடியில் நடந்தது.

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனம் கடந்த 121 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் 133வது புதிய கிளை திறப்பு விழா23.5.2025 வெள்ளிக்கிழமையன்று கதவிலக்கம் 47, AAA காம்ப்ளக்ஸ், MRV நகர்(RTOஅலுவலகம் அருகே), பூவாளூர் ரோடு, லால்குடி என்ற விலாசத்தில் உள்ள கட்டிடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிதியின் தலைவர் கல்யாணசுந்தரம் எம்பி விழாவிற்கு தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரை.மாணிக்கம் புதிய கிளையினை திறந்து வைத்தார். கட்டிட உரிமையாளர் விஜயமூர்த்தி பாதுகாப்பு பெட்டக வசதியை திறந்து வைத்தார். முன்னாள் ஒன்றிய துணை தலைவர் பெரியய்யா, நிதியின் மேலாண் இயக்குனர்வேலப்பன், இயக்குநர் குருபிரசாந்த், பொது மேலாளர் வெங்கடேசன், கம்பெனி செயலர் கண்ணன், துணைப் பொது மேலாளர் கருணாநிதி, உதவி பொது மேலாளர் முருகேசன், கிளை மேலாளர் மணிகண்டபிரபு, ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.