போச்சம்பள்ளி, அக். 31: போச்சம்பள்ளி வட்டம், புலியூரில் இருந்து தனியார் கம்பெனி வழியாக ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகிறது. மேலும் சிப்காட் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், இந்த வழியாகதான் செல்ல வேண்டும். இந்நிலையில், புலியூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள், பல முறை மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மின்கம்பம் விழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்குள், மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement 
 
  
  
  
   
