ஊத்தங்கரை, அக்.31: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியைச் சேரந்தவர் காதர்பாஷா. இவரது மகள் நசீபா(20), போச்சம்பள்ளியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், வழக்கம் போல் வேலைக்கு சென்ற நசீபா, பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் காதர்பாஷா அளித்த புகாரின் பேரில், எஸ்ஐ சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement 
 
  
  
  
   
