ஓசூர், அக். 30: ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில், விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் முதியோர்கள் நடைபயிற்சி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானம் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில், மைதானத்திற்குள் சுமார் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. அங்கு குழந்தைகள், முதியோர்களை நாய்கள் சுற்றி சுற்றி வந்து அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அவர்கள் பீதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி போடவேண்டும். மைதானத்திற்கு தெருநாய்கள் வராமல் இருக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement
