ஒசூர், செப்.30: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி சின்னபேளகொண்டப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் மத்திகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த டிப்பர் லாரியில் சோதனையிட்டனர். அதில், ஒரு யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவர் மற்றும் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement