ஓசூர், செப்.30: ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்திய ராமநாதபும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காருக்குள் 161 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், 28 கர்நாடக மாநில மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.6.38 லட்சம் இருக்கும். தொடர்ந்து அதனை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பிரபு(27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement