ஓசூர், ஆக.30: ஓசூர் ஒன்றியம், பேகேப்பள்ளி ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, பொதுமக்கள் வழங்கிய மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மின்இணைப்பில் பெயர் மாற்றம், ஆதார் திருத்தம், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கோரி பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற 47 துறை சார்ந்த பணிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, கோபால், சிவா, வேணு, மஞ்சுநாத், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement