கிருஷ்ணகிரி, அக்.29: கிருஷ்ணகிரி மாவட்டம் பிபிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (40), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தை, அதேஊரை சேர்ந்த வெல்டிங் கடை ஊழியரான முனீர் என்பவருக்கு விற்றுள்ளார். இதற்காக முதல் தவணையாக முனீர் ரூ.15 லட்சத்தை வேலுவிடம் கொடுத்துள்ளார். மீதி ரூ.6 லட்சம் பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் பல மாதங்களாக முனீர் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலு, பணத்தை வழங்குமாறு முனீரிடம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முனீர், வேலுவை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து வேலு ராயக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முனீரை தேடி வருகின்றனர்.
+
Advertisement

