ஊத்தங்கரை, அக்.29: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட எம்ஜிஆர் நகரில், கிருஷ்ணகிரி தனிப்படை எஸ்ஐ பிரபாகரன், எஸ்எஸ்ஐ வெங்கடாஜலம் மற்றும் போலீசார் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாக, ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில், அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்த அன்பழகன் (65) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 319 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ மோகன் தலைமையில் போலீசார் காரப்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பதுக்கி வைத்து மது விற்பனை செய்த தேவி (45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 54 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே பகுதியில் மது விற்பனை செய்த பெருமா (66) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

