தேன்கனிக்கோட்டை, அக்.29: தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவைச் சேர்ந்த தொழிலாளியின் 17 வயது மகள் பிளஸ்1 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement

