ஓசூர், ஆக.29: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், உளிவீரனப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த 2பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனசேத்தி(25), பீகார் மாநிலத்தை சேர்ந்த டோபிக்(20) என்பதும், இருவரும் உளிவீரனப்பள்ளி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். மேலும், கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
+
Advertisement