கிருஷ்ணகிரி, நவ.28: கிருஷ்ணகிரி அடுத்த எண்ணேகோல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (50). கூலித்தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலை லண்டன்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே, டூவீலரில் சென்ற போது, சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனால் அவர் ஹாரன் அடித்தும், அந்த வாலிபர்கள் விலகி நிற்கவில்லை. இதனால், அவர்களை எல்லப்பன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், எல்லப்பனை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயமடைந்த எல்லப்பனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் விசாரித்தனர். அதில், எல்லப்பனை தாக்கியது லண்டன்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(26), முத்தமிழ்(30) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த ேபாலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
+
Advertisement

