Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசூர் ராமலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

ஓசூர், நவ.28: ஓசூர் வசந்த் நகரில் பிரசித்தி பெற்ற பர்வதவர்த்தினி அம்மன் உடனுறை ராமலிங்கேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகளோடு துவங்கிய நிகழ்ச்சியில், புனிதநீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. புனிதநீர் அடங்கிய கலசங்களை, வேத மந்திரங்கள் முழங்க எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவர் ராமலிங்கேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விழாவில், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, பாஜ நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் நந்தகுமார், தேன்கனிக்கோட்டை அதிமுக பிரமுகர் நாகேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.