ஓசூர், அக்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் ஓசூர் ராயக்கோட்டை சாலை பைரமங்கலம் ஜங்ஷன் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்த முயன்றனர். அப்போது டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். இதையடுத்து போலீசார் கன்டெய்னர் லாரியை துரத்தினர். அப்போது, டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார். பின்னர், போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்த போது, உள்ளே 400 கிலோ தடை செய்யப்பட்ட குட்காகடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 600 மதிப்பிலான குட்கா, மினி கன்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து குட்கா கடத்தி வந்தவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
