ஓசூர், அக்.28: சூளகிரி அருகே பீலாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கா. இவர் தனது நண்பர்களுடன் சூளகிரிக்கு வந்தார். அங்கு அவர் பானி பூரி சாப்பிட விரும்பி, சூளகிரி ரவுண்டானா அருகேயுள்ள ஒரு பானிபூரி கடைக்கு சென்றார். அங்கு தனக்கும், நண்பர்களுக்கும் சேர்த்து, 4 பிளேட் பானிபூரி ஆர்டர் செய்தார். அதனை வாங்கி ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கிய போது, பானிபூரியில் புழுக்கள் நெளிந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கடைக்காரரோ ஏதோ நடந்து விட்டது. இதை பெரிதுபடுத்தாதீர்கள் என்று கூறி விட்டு, கடையை உடனடியாக பூட்டி விட்டு அங்கிருந்து நைசாக கிளம்பி விட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
+
Advertisement
