போச்சம்பள்ளி, நவ.27: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, நாகோஜனஅள்ளி பேரூராட்சி மன்றத்தின் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்று கொண்டார். பதவியேற்பு விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி துணை தலைவர் குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் தங்கராஜ், செயல் அலுவலர் ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement

