ஓசூர், நவ.26: ஓசூர் சின்ன எலசகிரியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 16ம்தேதி அவர் அத்திப்பள்ளியில் இருந்து ஓசூருக்கு, அரசு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது இவரது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திருடு போனது. இதுகுறித்து சிவசங்கர் சிப்காட் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், செல்போனை திருடியது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, பெங்களூரு-மைசூர் சாலையில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் வசிக்கும் தங்கராஜ் (30) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வால்மீகி நகர் செல்வா (25) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

