தேன்கனிக்கோட்டை, நவ.26: தேன்கனிக்கோட்டை அருகே உரிமம் இல்லாமல், வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து 2 விவசாயிகளை கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் ஒசஹள்ளி கிராமத்தில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி மாதேஷ், (47) என்பவரது வீட்டிற்கு பின்னால் 2 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனால் மாதேஷ் மற்றும் ஏணிபெண்டா பகுதியை சேர்ந்த அவரது நண்பரான பச்சையப்பன், (40), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement

