ஓசூர், நவ.26: சூளகிரி அருகே கோயிலில் நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூளகிரி தாலுகா தோரிப்பள்ளி அருகே உள்ள பீமண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா(70). இவர் அந்த பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார். கடந்த 22ம்தேதி இரவு அவர் பூஜைகளை முடித்து, கோயிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை கோயிலை திறக்க வந்த போது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கட்ராமப்பா உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் சிலையில் இருந்த 8 கிராம் தங்க நகைகள், கோயிலில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

