கிருஷ்ணகிரி, செப்.26: கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டியம்பட்டி அருகில் உள்ள திருவண்ணாமலை சாலையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியில்லாமல், சிலர் எருது விடும் நிகழ்ச்சியை நடத்தியதாக, டவுன் எஸ்ஐ அன்பழகனுக்கு புகார் சென்றது. இதை தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி, எருதுவிடும் நிகழ்ச்சியை நடத்தியதாக, செந்தில் நகரை சேர்ந்த செல்வா, விக்னேஷ், சக்திவேல், சுதர்சன், பிரவீன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். அதே போல், குருபரபள்ளி எஸ்ஐ ரவிச்சந்திரன் வல்லனகுப்பம் பகுதியில் அனுமதியில்லாமல் எருது விடும் நிகழ்ச்சியை நடத்தியதாக சந்தோஷ், சுரேஷ், பாலாஜி, பார்த்திபன், பாலு ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement