தேன்கனிக்கோட்டை, அக்.25: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மாரசந்திரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று தாயிடம் இருந்து பிரிந்த 4 வயதுக்குட்பட்ட குட்டி யானை சுற்றித்திரிந்தது. குட்டி யானையை பார்த்ததும் பள்ளி மாணவர்கள் ஆனந்தத்தில் கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, குட்டி யானையை அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டிச்சென்றனர். அப்போது குட்டி யானையை பார்க்க கிராம மக்களும் அதிகளவில் திரண்டனர். வனத்துறையினர் கண்காணித்து குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
+
Advertisement
