தேன்கனிக்கோட்டை, செப்.25: கெலமங்கலத்தில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மகளிர் உரிமை தொகை, பட்டா மாற்றம், முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, காப்பீடு அட்டை மற்றும் துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 1வது வார்டு முதல் 8வது வார்டு வரையுள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். இம்முகாமில் பேரூராட்சி தலைவர் தேவராஜ், செயல் அலுவலர் மஞ்சுநாத், துணைத் தலைவர் மும்தாஜ், இளைநிலை எழுத்தர் சீனிவாசன், வார்டு உறுப்பினர்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement