போச்சம்பள்ளி, செப்.25: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், போச்சம்பள்ளி ஒன்றிய திமுக சார்பில், பூத் பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் காட்டகரம், வெப்பாலம்பட்டி, மகாதேவகொள்ளஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். பர்கூர் தொகுதி பார்வையாளர் முனிவேல், மாநில பொதுக்குழு அஞ்சூர் நாகராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் பழனி, மாவட்ட துணை அமைப்பாளர் காமராஜ், வெங்காடசலம், தெய்வம், முன்னாள் தலைவர் சக்திவேல், ரமேஷ், மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement